ஈபிடிபி தேவையா? இல்லையா?:டக்ளஸ் கேள்வி

0
583
EPDP leader Douglas Devananda

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் உதவி கோரவில்லை என்று எம்.ஏ.சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் சொல்வது பொய் எனவும், பொது மேடையில் முகத்திற்கு முன்னால் அவர்கள் இருவரும் ஈ.பி.டி.பியிடம் உதவி கோரவில்லை என்று சொல்ல மாட்டார்கள் எனவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.(EPDP leader Douglas Devananda)

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பியின் கட்சி அலுவலகத்தில் நேற்று (16.06.20180 சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஊடவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்வியடம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஈ.பி.டி.பி ஆதரவு வழங்கியதற்காக பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா சொல்வது உண்மைக்கு புறம்பான விடயமாகும்.

அவர்கள் எங்களுடன் பேசியதற்கான ஆதரங்கள் ஒரு புறம் இருக்கையில், இருவரும் பொது மேடை ஒன்றில், எனது முகத்திற்கு முன்பாக வந்து சொல்ல மாட்டார்கள் தாங்கள் ஈ.பி.டி.பியுடன் பேசவில்லை என்று.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா மட்டுமே உண்மையை சொல்லியுள்ளார்.

அதாவது இது தொடர்பில் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள என்னுடைய அறைக்கு தான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் வந்தது என்று உண்மையை வெளியில் சொல்லியுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

tags :- EPDP leader Douglas Devananda

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites