டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமால் மீது ஐசிசி முறைப்பாடு

0
484
ICC filed chargesheet Sri Lankan Test captain Dinesh Chandimal

(ICC filed chargesheet Sri Lankan Test captain Dinesh Chandimal)

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கட் வாரியம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாளான நேற்று (16) போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக போட்டி நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனால், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் அடங்கிய குழுவினர் மைதானத்தை விட்டு வௌியேறினர்.

இதனை அடுத்து போட்டி சுமார் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தினர் இந்த பிரச்சினையில் தலையிட்டதைத் தொடர்ந்து போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

(ICC filed chargesheet Sri Lankan Test captain Dinesh Chandimal)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites