Categories: MIDDLE EASTSaudi

ஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்

Saudi Joint Chiefs Operations seize main airport Yemen Tamil news

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது, சவுதி தலைமையிலான படைகள் ஹொடைடா நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டுள்ளன. இதேபோல், ஹொடைடா நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் செங்கடல் பகுதியில் இந்த படைகளின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஈரானில் இருந்து ஆயுதங்களை ஹவுத்திப் போராளிகள் கடல்வழியாக கடத்தி வருவதற்கு ஹொடைடா துறைமுகம் முக்கிய பகுதியாக விளங்குவதால் இதை கைப்பற்றியே தீர வேண்டும் என ஏமன் அரசு கருதுகிறது.

இதற்கிடையில், ஏமன் நாட்டில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஹொடைடா நகரின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நாட்டின் தலைநகர் சனாவை ஹொடைடா துறைமுகத்துடன் இணைக்கும் முக்கிய சாலையை துண்டித்துள்ளன.

மூன்றாண்டு கால உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஹொடைடா விமான நிலையத்துக்கு சில மீட்டர் தூரத்தில் அல் மன்ஸர் பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆவேசமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

அநேகமாக, இன்னும் சில மணி நேரத்துக்குள் ஹொடைடா விமான நிலையத்தை அரசுப் படைகள் கைப்பற்றி விடலாம் என ஏமனில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Saudi Joint Chiefs Operations seize main airport Yemen Tamil news
Swasthi R

Share
Published by
Swasthi R
Tags: Saudi Joint Chiefs Operations seize main airport Yemen Tamil news

Recent Posts

டுவிட்டரில் மோடியை விமர்சித்ததால் நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு!

நடிகையும், காங்கிரஸின் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.actress ramya booked sedition criticized modi india tamil news…

28 mins ago

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை எரிவாயு விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. Cooking Gas Price…

1 hour ago

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸை 7 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை…

1 hour ago

காவலர் கண்முன்னே இளைஞரை நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள்! (காணொளி)

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை, நடுரோட்டில் மர்ம நபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.mysterious men brutally…

2 hours ago

முதலமைச்சருக்கு ஸ்டாலின் விடுத்த சவால்!

Stalin challenge Chief Minister } இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சியாளர்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க, திமுகவுக்கு எதிராக…

2 hours ago

டெல்லியில் அடுக்கு மாடி வீழ்ந்து விபத்து; 4 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

டெல்லியில் இன்றைய தினம் மூன்று அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். (Four children killed building…

3 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.