சீனாவின் கண்ணத்தை அறைந்த ட்ரம்ப் – தீர்வை கட்டண அதிகரிப்பு எச்சரிக்கை

0
559
tamilnews Trump slaps tariffs China triggering swift retaliation

(tamilnews Trump slaps tariffs China triggering swift retaliation)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று (15) சீன இறக்குமதிகளில் பன்மடங்கு பில்லியன்களை இலக்கு வைத்து 25 சதவீத தீர்வை கட்டணத்தை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பெய்ஜிங்கில் இருந்து உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

சந்தைகள் மற்றும் தொழில்துறைகளால் அச்சத்துடன் நோக்கப்பட்ட ஒரு முழு வர்த்தக யுத்தத்தின் விளிம்பிற்கு உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதாரங்களும் தள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள் தொடர்பாக கூறப்படும் திருட்டுக்கு தண்டனையை வழங்குவதற்கான உறுதியை கொண்டிருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிகள் தொடர்பில் சீனா பின்வாங்கினால் “கூடுதல் தீர்வைக் கட்டணங்களை” அறவிட நேரிடும் என்று அறிக்கை ஒன்றில் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

(tamilnews Trump slaps tariffs China triggering swift retaliation)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites