பருவமழை பெய்வதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை – குமாரசாமி

0
443
Karnataka Chief Minister Komagasamy said problem opening Kavirai

Karnataka Chief Minister Komagasamy said problem opening Kavirai

பருவமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை என கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் இந்த ஆண்டு பருவமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. இதனால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

இதையடுத்து, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டேன். நேற்றிரவு முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பருவ மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் நடுவர் மன்ற உத்தரவிட்டுள்ளபடி மாதாந்திரம் திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடுவதில் பிரச்சனை இருக்காது என தெரிவித்துள்ளார்.

Karnataka Chief Minister Komagasamy said problem opening Kavirai

More Tamil News

Tamil News Group websites :