தெற்காசியாவில் இலங்கைப் பெண் விமானிகள் படைத்த சரித்திரம்!!

0
1696
Female pilots incorporated Sri Lanka Air Force first time

இலங்கை விமான படையில் முதன்முறையாக பெண் விமானிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை வழங்கும் நோக்கில் இலங்கை விமானப்படைக்கு முதல் முறையாக பெண் விமானிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். (Female pilots incorporated Sri Lanka Air Force first time)

ஆயுதம் ஏந்தி தீவிர பயிற்சி பெற்ற ஜயனி தத்சரனி ஹேவாவித்தாரன, பவித்ரா லக்ஷானி குணரத்ன, பியுமி நிமல்கி ஜயரத்ன மற்றும் ரஞ்கனா வீரவர்தன ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.

விமானம் ஒன்றை ஓட்டுவதென்றால், மிகப்பெரிய பொறுப்பான தொழிலாகும். விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் உயிர்கள் விமானிகளின் கையில் உள்ளன.

இவ்வாறான நிலையில் சவால்களை வென்ற முதல் பெண் தன்னார்வ விமானிகளாக இவர்கள் இலங்கை விமானப்படை வரலாற்றின் இடம்பிடித்தனர்.

குறித்த விமானிகள் தற்போது திருகோணமலை சீன துறைமுகத்தில் விமான பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

பயிற்சியின் இறுதி உலக விமானப்படை விமானிகளை கொண்ட நாடுகளில் இலங்கையும் இணையவுள்ளது.

பெண் விமானிகளை இணைத்து கொள்ளும் நாடுகள் பட்டியலில் தெற்காசியாவில் இலங்கை முன்னணி இடம் வகிக்கிறது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் பெண் விமானிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். எனினும் இலங்கையில் நிலவிய போர் நிலைமை காரணமாக பெண் விமானிகளை இணைத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

குறித்த பெண் விமானிகளுக்கு 2 வருட பயிற்சிகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

tags :- Female pilots incorporated Sri Lanka Air Force first time
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites