மக்காவின் புனிதப் பள்ளியின் தவாப் சுற்றும் பகுதியை 10 நிமிடத்திற்குள் சுத்தம் செய்து சாதனை!

0
776
cleaning makka mosque sacred school 10 minutes mildeleast

cleaning makka mosque sacred school 10 minutes mildeleast

புனிதப் பள்ளியின் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 3,000 ஆண், பெண் பணியாளர்கள் 24 மணிநேரமும் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுடைய முக்கியப் பணிகளாக கார்பெட் சுத்தம் செய்தல், கிருமி நாசினிகளை உபயோகித்தல், குப்பைகளை அகற்றுதல், தொழுகைக்காக கார்பெட் விரித்தல், நோன்பு திறக்கும் நேரத்தில் சுப்ரா விரித்தல் போன்ற பணிகளும் அடங்கும்.

இந்த ரமலானில் கூடுதலாக 300 துப்புரவு பணியாளர்களும், 100 சுப்ரா விரிப்பாளர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வுக்காகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பொதுவாக ஜமாஅத் தொழுகை ஹரம் ஷரீஃபில் நடைபெறும் நேரத்தை தவிர பிற நேரங்களில் இடைவிடாது சுத்தம் செய்யப்படும்.
கடந்த 27 ஆம் இரவின் மஃரிப் தொழுகைக்குப் பின் உடனடியாக தவாப் சுற்றும் மடஃப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முழு மடஃப் பகுதியையும் சுமார் 9.47 நிமிட நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் சுத்தம் செய்து முதன்முறையாக சாதனை செய்துள்ளனர்.

மேலும் அன்றைய இரவு புனிதப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார வளாகங்களிலிருந்து சுமார் 291 டன் குப்பைகளையும் அகற்றியுள்ளனர். ஹரமில் சுமார் 25,000 கார்பெட்டுக்கள், 1,500 பெரிய அளவு குப்பை தொட்டிகளும், 1,500 சிறிய அளவு குப்பை தொட்டிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

cleaning makka mosque sacred school 10 minutes mildeleast