கனிஷ்க்கின் 138 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

0
810
138 crores assets freezing - enforcement action

பிரபல கனிஷ்க் நிறுவனம், கடன் பெற்று மோசடி செய்ததாக 14 வங்கிகளின் கூட்டமைப்பு, சி.பி.ஐ யிடம் புகார் அளித்தது. வங்கி கணக்கு மற்றும் இருப்புகளை தவறாக காட்டி, 824 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகாரில் கூறப்பட்டிருந்தது.138 crores assets freezing – enforcement action

இதுதொடர்பாக, கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீடா ஜெயினிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கியது. இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் புதுக்கரையில் உள்ள கனிஷ்க் நிறுவனத்தின் நகை தொழிற்சாலைக்கு சீல் வைத்து, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது. சட்டவிரோத பணபரிமாற்றத்திற்கு வங்கி கணக்கை பயன்படுத்தியதால், வங்கிக் கணக்கில் இருந்த 143 கோடியே 58 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத்தொகை முடக்கப்பட்டது.

இந்நிலையில் கனிஷ்க் நிறுவனத்தின் 138 கோடி ரூபாய் சொத்துக்களையும், அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது. இதன்மூலம், கனிஷ்க் நிறுவனத்தின் 281 கோடி ரூபாய் சொத்துக்கள் மற்றும் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :