சவுதியில் வெற்றிகரமாக செயல்படும் ஈத்தாம் வங்கி !

0
775
Saudi initiative campaign targeting Ramadan food waste

Saudi initiative campaign targeting Ramadan food waste

புனித மக்காவில் செயல்படும் ‘ஈத்தாம்’ எனப்படும் சவுதி உணவு வங்கி

சவுதி அரேபியா ஒரு பக்கம் உலகிலேயே அதிகமான உணவை வீணடிப்பவர்கள் என சுயஆய்வின் மூலம் அறிவித்துள்ளது, இன்னொரு பக்கம் வீணாகும் உணவுகளை சேகரித்து இல்லாதோருக்கு வழங்கும் திட்டத்தையும் புனித மக்காவில் செயல்படுத்தி வருகிறது.

‘ஈத்தாம்’ (Etaam) எனப் பெயரிடப்பட்டுள்ள சவுதி உணவு வங்கி (Saudi Food Bank) திட்டத்தின் மூலம் இந்த ரமலானில் மட்டும் 48 மணிநேர முன் தகவலின் மூலம் நிறுவனங்களிடமிருந்தும், தனியார்களிடமிருந்தும் சுமார் 360 தன்னார்வ தொண்டர்கள் மூலம் திரட்டி சுமார் 1,740,000 உணவுப் பார்சல்களை தேவையுள்ள குடும்பங்களுக்கு வழங்கியுள்ளனர்.

வருடம் முழுவதும் சுமார் 6 மில்லியன் உணவுப் பார்சல்களை பெரும் பெரும் ஹோட்டல்கள், உணவகங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் இதர வகை விழாக்களில் மீதமாகும் உணவை திரட்டுகின்றனர், இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 9,000 உணவுப் பொட்டலங்களை குப்பைக்கு செல்வதிலிருந்து தடுத்து மிச்சப்படுத்துகின்றனர்.

B2017 ஆம் ஆண்டில் ரெட் சீ மால் புட் கோர்ட்டுகளிலிருந்து (Red Sea Mall Food Courts) மட்டும் சுமார் 49 டன் எடையுள்ள உணவை சேமித்துள்ளனர், இது சுமார் 144,000 உணவுப் பார்சல்களுக்கு இணையான உணவு சேமிப்பாகும்.

மற்றொரு புறம் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் சவுதியர்களின் மொத்த சனத்தொகையில் சுமார் 59.4 சதவிகிதம் பேர் அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளாலும், 23.9 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயாளும், 40.5 சதவிகிதம் பேர் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வகள் தெரிவிக்கின்றன.

Saudi initiative campaign targeting Ramadan food waste