ஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி!!!

0
512
Amelia Kerr smashed unbeaten 232 ODI news Tamil

நியூஸிலாந்து கிரிக்கெட் வீராங்கனை அமீலியா கெர் சர்வதேச கிரிக்கட்டில் முக்கியமான சாதனையொன்றை நேற்று நிலைநாட்டியுள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரையில் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனையின் பட்டியலில், கெர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் அமீலியா கெர் 232 ஓட்டங்களை விளாசி அசத்தியுள்ளார்.

அமீலியா கெர் 145 பந்துகளுக்கு 31 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 232 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்துள்ளார்.

1997ம் ஆண்டு அவுஸ்திரேலிய வீராங்கனை பெலிண்டா கிளார் விளாசிய 229 ஓட்டங்கள் என்ற சாதனையையே இவர் நேற்று முறியடித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 264 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், மார்டின் குப்டில் 237 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதற்கு அடுத்தப்படியாக நியூஸிலாந்து மகளிர் அணியின் அமீலியா கெர் 232 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

<<Tamil News Group websites>>

Amelia Kerr smashed unbeaten 232 ODI news Tamil, Amelia Kerr smashed unbeaten 232 ODI news Tamil