யாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்!

0
919
Valvettithurai suddenly arrested 15 people

யாழ்.வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) இரவோடிரவாக 15 இளைஞர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (Valvettithurai suddenly arrested 15 people)

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது இரு அணி ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிக் குழு மோதலாக வெடித்தது.

இந்தச் சம்பவத்தில் இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறுபேர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுனர்.

இந்நிலையில் கைதான சந்தேகநபர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய நேற்றைய தினம்(12) மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

tags :- Valvettithurai suddenly arrested 15 people

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites