காங்கேசன்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….?

0
887
Two fishermen fishing Kankesanthurai missing two days

யாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இரு நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (Two fishermen fishing Kankesanthurai missing two days)

குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(11) காங்கேசன்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையிலேயே இதுவரை கரைதிரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடற்படையினரின் உதவியுடன் காணாமற் போன குறித்த இரு மீனவர்களையும் தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சி. இரத்தினசிங்கம்(வயது-65) மற்றும் டே.ரேகன்(வயது-22) ஆகிய இருவருமே இவ்வாறு காணாமற் போயுள்ளவார்களாவர்.

tags :- Two fishermen fishing Kankesanthurai missing two days

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites