நான்கு மணித்தியால போராட்டம் – பணயக் கைதிகள் விடுவிப்பு

0
503
tamilnews Paris incident ends man arrested hostages released

(tamilnews Paris incident ends man arrested hostages released)

(காணொளி மூலம் – த கார்டியன்)

பாரிஸ் பத்தாம் வட்டாரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயுததாரி ஒருவன் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்தான்.

அந்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்து மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய ஆயுததாரி கைது செய்யப்பட்டுள்ளான்.

சுமார் 4 மணித்தியாலங்கள் இந்த போராட்டத்திற்கு பின்னர் பொலிஸார் இந்த நடவடிக்கையை இரத்தக் களரியின்றி முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பாரிஸ் 10 ஆம் வட்டாரம் Rue des Petites Ecuries வீதியில் உள்ள கட்டிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

4 மணியளவில் கைத்துப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்களுடன்  உணவு விநியோக முகவர் போன்று கட்டிடத்துக்குள் நுழைந்த குறித்த ஆயுததாரி அங்கிருந்த ஒருவரை முகத்தில் பலமாக தாக்கியுள்ளான்.

தாக்கப்பட்ட நபர் தப்பியோடியதைத் தொடர்ந்து முன்னேறிய ஆயுததாரி கட்டிடத்தின் தரைத் தளத்தில் இருந்த அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த சில அதிகாரிகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்தான்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு BRI படையினர் குவிக்கப்பட்டு கட்டிடத்தை சுற்றிவளைத்தனர்.

தீயணைப்பு படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் உள்ள கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது வன்முறை மற்றும் பிடிவாத குணத்துடன் மேற்கொண்ட செயற்பாடேயன்றி பயங்கரவாத செயற்பாடு அல்லவென பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன், அந்த ஆயுததாரி கட்டிடத்திற்கு வௌியே தனக்கு உடந்தையாக செயற்படும் ஒரு நபரையும் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆயுததாரி தனக்கு பாரிஸில் உள்ள ஈரானிய தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த செயற்பாட்டை மேற்கொண்டுள்ளான்.

பேச்சுவார்த்தை மேற்கொண்டவர்களிடம், ஈரானிய தூதுவருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புவதாக ஆயுததாரி  ஒரு கடிதத்தை வழங்கியிருந்தான்.

தூதரக அதிகாரி பிரெஞ்சு அதிகாரிகளிடம் அதனை கையளித்துள்ளார்.

(tamilnews Paris incident ends man arrested hostages released)

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**