வடகொரியாவை எச்சரிக்கும் ஈரான் – டிரம்பை நம்ப வேண்டாம் என சாடுகிறது

0
732
tamilnews Iran state media calls promotion Mohammed bin Salman

(tamilnews Iran state media calls promotion Mohammed bin Salman)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில், ஈரான் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வடகொரியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை டிரம்ப் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு இரத்து செய்வார் என ஈரான், வடகொரியாவுக்கு எச்சிரித்துள்ளது.

சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரியா ஜனாதிபதி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் பற்றி தங்களுக்கு தெரியாது.

ஆனால், அமெரிக்கா ஜனாதிபதி தனது நாட்டுக்கு செல்வதற்கு முன்னரே அவர் செய்துக்கொண்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்வார்” என, ஈரான் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது பாகேர் நோபாக்ட் தெரிவித்துள்ளார்.

“டொனால்ட் டிரம்பை கிம் ஜாங் நம்பக் கூடாது எனவும், ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுவாயுத ஒப்பந்தத்தை, டிரம்ப் வெளிநாட்டில் இருக்கும் போதே இரத்து செய்தார் என்பதை மறந்துவிடக்கூடாது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamilnews Iran state media calls promotion Mohammed bin Salman)

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**