கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா : பல்லாயிரம் கணக்கான மக்கள் பங்கேற்பு

0
524
st anthony kochchikade feast

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத் திருவிழா இன்று 13ம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.(st anthony kochchikade feast)

கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நிகழ்வுகளில் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு திருப்பலியைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றதுடன் 11ம் திகதி திங்கட்கிழமை வரை தினமும் மாலை நவநாள் ஆராதனை இடம்பெற்றன.
நேற்று 12ம் திகதி வெஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெற்றதோடு இன்று 13ம் திகதி திருவிழா திருப்பலி மூன்று மொழிகளில் ஒப்புகொடுக்கப்பட்டது.
இன்றை திருநாள் சிறப்புத் திருப்பலி தமிழில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு நோயேல் இம்மானுவேல் ஆண்டகையின் தலைமையிலும் சிங்கள மொழித் திருவிழா திருப்பலி கொழும்பு துணை ஆயர் பேரருட்திரு மெக்ஸ்வல் சில்வா ஆண்டகையின் தலைமையிலும் ஆங்கில மொழித் திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்கத் தூதுவர் பேரருட்திரு பியார் வான் டொட் ஆண்டகையின் தலைமையிலும் இடம்பெற்றன.
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும்.

வழமையான வீதிகளில் திருப்பவனி இடம்பெறுவதுடன் இறுதி ஆசீர்வாதம் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இரவு 8.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
நவநாள் மறையுரைகளை தமிழ் மொழியில் அருட்தந்தை ஜெ. ரமேஸ் அடிகளாரும் சிங்கள மொழியில் அருட்தந்தை என்டன் தினேஸ் அடிகளாரும் வழங்கினர்.

tags:- st anthony kochchikade feast

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites