ரஷீட் கானுக்கு வாய்ப்பில்லை என்ற ஐ.பி.எல். அணிகள்!!! : மனந்திறந்த பயிற்றுவிப்பாளர்!!!

0
561
Rashid khan IPL 2018 news Tamil

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை பொருத்தவரையில், தற்போது மறுக்க முடியாத வீரராகியுள்ளவர் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கான்.

பந்து வீச்சிலும் சரி, இடைக்கிடையில் துடு்ப்பாட்டத்திலும் சரி, தன்னுடைய திறமைகளை சரியான நேரத்தில் அவர் வெளிப்படுத்த தவறுவதில்லை.

ஆனால் இத்தனை திறமைகள் அடங்கிய ரஷீட் கானுக்கான ஐ.பி.எல். வாய்ப்பு எப்படி கிடைத்தது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதுவும் 2017ம் ஆண்டு நடைபெறவிருந்த ஏலத்தில் முக்கியமான இரண்டு அணிகள் ரஷீட் கானை எடுக்க மறுத்த விடயத்தினையும், ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் லால்சாந் ராஜ்பூட் வெளியிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில் கொல்கத்தா மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளே ரஷீட் கானை வேண்டாம் என தெரிவித்துள்ளது.

லால்சாந் குறிப்பிடுகையில்,

“நான் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக இருக்கும் போது, ரஷீட் கானை ஐ.பி.எல். தொடரில் இணைக்க விரும்பினேன். அதன்மூலம் அவரின் திறமைகளை உலகறிய செய்யமுடியும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

அவரது பந்து வீச்சு பாணி மற்றும் பந்தை சுழற்றும் வேகம் என்ப என்னை அதிகம் ஈர்த்திருந்தது.

இதனால் ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கக்கூடிய அணிகளுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன். முதலாவதாக பஞ்சாப் அணியின் பயிற்றுவிப்பாளர் வீரேந்திர செவாக்கிடம் பேசினேன். எனினும் அவர் ரஷீட் கானை எடுக்க விரும்பவில்லை. அவர் என்னிடம், தங்கள் அணியின் சுழற்பந்து வீச்சுக்கு அக்ஷர் பட்டேல் இருக்கிறார் எனவும், தங்களுக்கு ஒரு சகலதுறை வீரர்தான் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் கொல்கத்தா அணியின் தலைவர் கௌதம் கம்பீரிடம் பேசினேன். தங்களது அணியில் ஏற்கனவே சுனில் நரைன் இருக்கின்றார் எனவும், அதானல் எங்களால் அவரை எடுக்க முடியாது என கூறினார்.

எனினும் என்னிடம் இன்னுமொரு வாய்ப்பு இருந்தது. ஹைதராபாத் அணியின் விவிஎஸ் லக்ஷமனிடம் பேசினேன். அவரிடம் ரஷீட் கானின் திறமைகளை பற்றி கூறினேன். தொடர்ந்து அவர் விளையாடும் போட்டிகளையும் அவதானிக்குமாறு குறிப்பிட்டிருந்தேன். அவரும் ரஷீட் கான் விளையாடிய உள்ளூர் போட்டிகளை பார்வையிட்டார். பின்னர் ரஷீட் கானை தங்களது அணி்க்குள் 2017ம் ஆண்டு எடுத்தார். தற்போது ரஷீட் சர்வதேச டி20 போட்டிகளின் சிறந்த பந்து வீச்சாளராக வலம் வருகின்றார்” என குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து வெளிவந்த ரஷீட் கானுக்கு, தற்போது சர்வதேச டி20 தொடர்களில் இருந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

<<Tamil News Group websites>>

Rashid khan IPL 2018 news Tamil, Rashid khan IPL 2018 news Tamil