மஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி

0
1101
Mano ganesan Masthan MP

தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.(Mano ganesan Masthan MP)

பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானை இந்து கலாசார பிரதியமைச்சராக நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் மனோ தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் எவ்வித பிரச்சினையுமில்லை. ஆனால், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சிலிருந்து இந்து கலாசார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.

மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது. இஸ்லாமிய மத விவகாரம் அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் நான் அதையும் எதிர்த்திருப்பேன்.

மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டுக்கூடாது. அந்தந்த மத விவகாரங்கள் குறித்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது.

குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதியமைச்சர், அந்த அமைச்சு கையாளும்போது மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.

இந்து கலாச்சார அமைச்சு இதுவரை, டி.எம். சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள். இல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருது‍வோம் என குறிப்பிட்டுள்ளார்.

tags:- Mano ganesan Masthan MP

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites