கோட்டாபயவின் சீனப் பயணம்; அதுல் கேஷாப் கேள்வி

0
1024
Gotabaya Chinese visit US Ambassador Atul Kasab questioned

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் கேள்வியெழுப்பியுள்ளார். (Gotabaya Chinese visit US Ambassador Atul Kasab questioned)

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மஹிந்த ராஜபக்சவை அவரது விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போதே கோட்டாபய ராஜபக்ச தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் அதுல் கேசாப் சில விடயங்கள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளதாக குறித்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச விரும்பப்படாதவர் என்று அதுல் கேசாப் கூறினார் என்றும் தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை அவர் வெளிப்படுத்தினார் என்றும், மகிந்த ராஜபக்சவின் பணியகப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங்கில பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, சங்ரிலா விடுதியில், கடந்த மே 13 ஆம் திகதி நடந்த வியத்மய ஆண்டு விழாவுக்கு முன்னதாக, கோட்டாபய ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிசா பிஸ்வால், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலராக இருந்த போது, 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இலங்கை வந்திருந்தார் என்றும், அவரை கோட்டாபய ராஜபக்ச மரியாதையாக நடத்தவில்லை என்றும், இந்தச் சந்திப்பின் போது, அதுல் கேசாப் நினைவுபடுத்தியிருக்கிறார்.

இதனை மஹிந்த ராஜபக்சவின் செயலகப் பேச்சாளர் கூறியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags; Gotabaya Chinese visit US Ambassador Atul Kasab questioned