புதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook

0
380
facebook memories day month launch

(facebook memories day month launch)
Facebook தளத்தில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூற முடியும்.

Facebook ல் முன்னதாக வழங்கப்பட்டிருந்த ஆன் திஸ் டே (On This Day) அம்சத்தை தினமும் 9 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெமரீஸ் பக்கம் இதே அம்சத்திற்கான புதிய நீட்சியாக பார்க்கப்படுகிறது. Facebook பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அம்சம் பயனர்களை மனதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தெரியவந்தது.

அந்த வகையில் On This Day அம்சம் மேம்படுத்தப்பட்டு, பயனர்கள் தங்களின் கடந்த கால நினைவுகளை மீண்டும் திரும்ப பார்ப்பதை மிக எளிமையாக்குகிறது. புதிய மெமரீஸ் பக்கத்தில் ஆன் திஸ் டே (On This Day), ஃப்ரென்ட்ஸ் மேட் ஆன் திஸ் டே (Friends Made On This Day), ரீகேப்ஸ் ஆஃப் மெமரீஸ் (Recaps of Memories), மெமரீஸ் யூ மே ஹேவ் மிஸ்டு (Memories You May Have Missed) போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

facebook memories day month launch