வடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.!!

0
938
Chief Secretary's petition Northern Provincial Council

வடக்கு மாகாணப் பிரதம செயலாளரை நாளை வியாழக்கிழமை (14) யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இன்றைய தினம் அழைப்பாணை விடுத்துள்ளார். (Chief Secretary’s petition Northern Provincial Council)

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்காக வடக்கு மாகாணப் பிரதம செயலாளரால் விடுக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கோரலினை இரத்துச் செய்து உத்தரவிடுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் உறுதிகேள் நீதிப் பிரேரணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணையின் போதே எதிர் மனுதாரரான பிரதம செயலாளரை மன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- Chief Secretary’s petition Northern Provincial Council

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites