தனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை!!

0
933
Private doctors decision government

எதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (Private doctors decision government)

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய வரிக் கொள்கைக்கு அமைவாக ஏப்ரல் 01ம் திகதி முதல் வைத்தியர்களின் வருமானத்தில் இருந்து நூற்றுக்கு 24 வீத வரி அறவிடப்படுவதுடன், அதனை நூற்றுக்கு 12 வீதமாக குறைக்குமாறு விஷேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருடன் விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கம் நேற்று (11) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு நிதியமைச்சர், அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து பேச்சுவார்த்தை இறுதித் தீர்வின்றி நிறைவடைந்ததாக விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இன்றைய தினம் சங்கத்தின் மத்திய செயற்குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- Private doctors decision government
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites