இனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்??

0
616
neet exam india gvr , india tamil news, india news, india amil seidhi, neet exam,

{ neet exam india gvr }

நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ நீட் தேர்வினை நடத்தும் போதே பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. வினாதாள்கள் தயாரித்ததில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிழுவையில் உள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக 2017-18 ஆண்டில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் இனி நீட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே 2019-ம் ஆண்டிற்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாணவர்கள் நீட் தேர்வை இனி வரும் காலங்களில் ஆன்லைனில் எழுதுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதற்கான நடைமுறைகள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags; neet exam india gvr

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*குழந்தைகளுக்காக “நல்லெண்ண தூதுவர் நடிகை திரிஷா” விழிப்புணர்வு பேரணி!

*இறந்த பிணத்தை புதைக்காமல் வைத்து காத்திருந்த குடும்பம்!!

*மட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்!

*கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

*சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்! இவர்களுக்கு நடந்தது என்ன??

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com