ஏமனின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சக்கட்ட தாக்குதலில் சவூதி!

0
380

ஹவுத்தி இன மக்கள் ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். Saudi Arabia Joint Forces Attack Hodeidah Harbour City

அவர்கள் மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது, சவுதி தலைமையிலான படைகள் ஹொடைடா நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டுள்ளன.

இதேபோல், ஹொடைடா நகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் செங்கடல் பகுதியில் இந்த படைகளின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பீரங்கி மூலமாகவும், போர் விமானங்கள் மூலமாகவும் ஹவுத்தி போராளிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், ஹொடைடா துறைமுகத்தை ஹவுத்திப் போராளிகள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஏமன் நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தர் மார்ட்டின் கிர்ஃபித்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

தங்களது போராயுதங்களை ஹவுத்தி படையினர் கைவிட்டு, அமைதிப் பாதைக்கு திரும்பினால் அவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது என்னும் வரைவு ஒப்பந்தத்துடன் அவர் ஹவுத்தி இன தலைவர்களுடன் சமரசம் பேசி வருகிறார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்