ஜீவாவின் ஜிப்ஸி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

0
793
Gypsy movie first look poster released,Gypsy movie first look poster,Gypsy movie first look,Gypsy movie first,Gypsy movie

ராஜுமுருகன் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் ”ஜிப்ஸி” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.(Gypsy movie first look poster released)

அதாவது, தமிழ் சினிமாவில் ”குக்கூ” படம் மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன். இவரின் அடுத்தப்படமான “ஜோக்கர்” சமகால அரசியலை நைய்யாண்டியாக சொல்லி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படம் மூலம் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார். இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றன. அதனால் ராஜுமுருகனின் மூன்றாம் படமான ”ஜிப்ஸி” படத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப் படத்தில் ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல் பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார்.

மேலும் ”குக்கூ”, ”ஜோக்கர்” திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாம் முறையாக ராஜுமுருகனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மீண்டும் கை கோர்த்துள்ளார்.

இரண்டு படங்களின் பாடல்களும், பிண்ணனி இசையும் பெரிதும் கவரப்பட்டது. படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ”அருவி” படப்புகழ் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா இப்படத்தை எடிட் செய்கிறார். நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல் கதையாக படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், ஜிப்ஸி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு பர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளது. மேலும் இப்படம் டிராவல் சம்பந்தப்பட்ட படம் என்பதை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டி நிற்கின்றது இப்படத்தின் போஸ்டர்.

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

பாராட்டாமல் இருக்க முடியவில்லை : காதலியை புகழ்ந்து தள்ளிய விஷால்..!

மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Gypsy movie first look poster released

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 11-06-2018