G7 மாநாடு (புகைப்படங்கள் உள்ளே)

0
912
G7 summit 2018 important things

பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜேர்மனி நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமாவ்பே நகரில் நடைபெற்றது. G7 summit 2018 important things

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது வரி விதிப்புகுளை டிரம்ப் அரசு தன்னிச்சையாக உயர்த்தியது என்று குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரச்சினை மாநாட்டில் பரதிபலித்தது.

ட்ரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தார். இதை டிரம்ப் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்க ட்ரம்ப் மறுத்து விட்டார். அத்தோடு மற்ற உறுப்பு நாடுகளை விமர்சிக்கும் வகையில் டிரம்ப் பேசினார்.

இந்த புகைப்படங்களை ஜேர்மன் அரசின் புகைப்படக்காரர் ஜிஸ்கோ டென்சல் எடுத்துள்ளார். இவற்றில் டிரம்ப், இதர நாடுகளின் தலைவர்கள் சூழ ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார். அருகில் உள்ள மேசையில் இமானுவேல் மக்ரோன், ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் ஆழ்ந்த சிந்தனையுடன் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் கையில் சில ஆவணங்களை வைத்துக் கொண்டு விவாதம் நடப்பது போல் உள்ளது. இந்த புகைப்படங்களில் டிரம்ப் மிகவும் அமைதியாக காணப்படுகிறார்.

இந்த புகைப்படங்களுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இத்தாலி அதிபர் கியுசிபிகான்தே உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான சில புகைப்படங்கள் வருமாறு!

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**