உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் சில விசித்திரமான முறைகள்!

0
918
strange medical methods around world popular

(strange medical methods around world popular)

மருத்துவத்துறை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் பலர், விசித்திரமான சில மருத்துவ முறைகளை நாடிச் செல்கின்றனர். அது குறித்து சில செய்தி குறிப்பு :

பதினி கவுட் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல தலைமுறையாக ஆஸ்துமா நோய்க்கு மீன் மருத்துவம் செய்து வருகின்றனர். அயிரை மீனின் வாயில், அவர்கள் தயாரிக்கும் மூலிகை மருந்தை வைத்து, ஆஸ்துமா நோயாளிகளின் வாயில் திணிக்கின்றனர். இதற்காக விளம்பரம் எதுவும் செய்வதில்லை ஆனாலும், மக்களின் வாய்மொழி விளம்பரத்தின் மூலம் இவ்வளவு பேர் வருவதாகவும் கூறுகின்றனர் பதினி கவுட் குடும்பத்தினர்.

இதை உண்டால் ஆஸ்துமா குணமாகி விடும் என்பது அங்கு வருபவர்களின் நம்பிக்கை. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முருகாஷிரா நாளில், மருத்துவ மீன் ஆஸ்துமா நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

இதேபோல் உலகம் முழுவதும் பல வினோதமான சிகிச்சைகள், இன்றளவும் நடைமுறையில் உள்ளன. கர்நாடகா மாநிலம் ஷிமோகா அருகே, நாராயண மூர்த்தி என்ற நாட்டு மருத்துவர் கேன்சர் நோய்க்கு, மூலிகை மருந்து கொடுத்து வருகிறார். அங்கும் பல மணி நேரம் காத்திருந்து ஆயிரக்கணக்கானோர் மருந்து வாங்கிச் செல்கின்றனர். சமீப நாட்களில் அதிகமாக பிரபலமடைந்து வரும் ஒரு மருத்துவம் கப்பிங். சிறிய அளவிலான கண்ணாடி கோப்பைகளை முதுகில் கவிழ்த்து வைக்கின்றனர். அது உடலில் உள்ள கெட்ட ரத்ததை எடுத்துவிடும் என்பது நம்பிக்கை. உடலில் அட்டைகளை கடிக்க வைப்பது, இன்னொரு மருத்துவ முறை. இந்த அட்டைகள் உடலில் உள்ள கெட்ட ரத்தத்தை உறுஞ்சி விடும் என்று நம்பி, இதையும் பலர் நாடிச் செல்கின்றனர்.

இதேபோல், காலில் மீன்களை கடிக்க வைப்பதால், காலில் உள்ள புண்கள் விரைவில் குணமாகி விடும் என்பதும், சிலரின் நம்பிக்கை. இதுவும் பல இடங்களில் பிரபலமாகி வருகிறது.

tags :- strange medical methods around world popular

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites