வீட்டு உரிமையாளர், குடியிருப்பாளருக்கு செய்தது சரியா?

0
739
French homeowner takes revenge

பிரான்ஸில், வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் முதல் வாடகைக்கு இருந்த நபரின் வீட்டின் முன்னால் குப்பை மற்றும் பழைய தளபாடங்களை கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் பெருந்தொகையானோரின் ஆதரவை பெற்றுள்ளது. French homeowner takes revenge

பிரெஞ்சு நகரப்பகுதியை சேர்ந்த Rozoy-sur-Serre (Aisne, Hauts-de-France) எனும் பகுதியில் அமைந்திருந்த 120m² பரப்பை கொண்ட குடியிருப்பின் வீட்டு உரிமையாளர் Thomas Ravaux நபர் ஒருவருக்கு அந்த குடியிருப்பை வாடகைக்கு கொடுத்திருந்தார்.

வாடகைக்கு இருந்த நபர் 14 மாதங்கள் வாடகை கொடுக்காமல், உரிமையாளரின் அழைப்புகள் மற்றும் கடிதங்களுக்கு பதில் அனுப்பாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த Mr.Ravaux லொறி ஒன்றை பிடித்து அந்த நபர் வீட்டில் வீட்டுச் சென்ற அனைத்து குப்பைகள், தளபாடங்கள், விளையாட்டு பொருட்கள், உடைகள், உடைந்த தளபாடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் மற்றும் அனைத்து பொருட்களையும் அதில் ஏற்றி வாடகைக்கு இருந்த நபரின் புதிய வீட்டின் முன்னால் கொண்டே கொட்டியுள்ளார்.

இதனை Mr.Ravaux வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் குறித்த வாடகைக்கு இருந்த நபரிற்கு 3 குழந்தைகள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த நபர் குளிர்சாதன பெட்டியில் உணவு பொருட்களை விட்டு சென்றுள்ளார். அதெல்லாம் அழுகிய நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், வீடுகள் பூராகவும் ஓட்டைகளும், பூச்சிகளும், அழுகிய நாற்றமும், உடைவடைந்த நிலையில் சில பகுதிகளும் இருந்ததாக தெரிவித்தார். வீடு திருத்தி தர வேண்டுமென வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் இதுவரை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளதுடன், இந்த வீடியோக்கு பலர் தங்களது ஆதரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**