இன்றைய ராசி பலன் 08-06-2018

0
742
Today horoscope 08-06-2018

இன்று!

விளம்பி வருடம், வைகாசி மாதம் 25ம் தேதி, ரம்ஜான் 23ம் தேதி,
8.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 9:27 வரை;
அதன்பின் தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 7:42 வரை;
அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today horoscope 08-06-2018 )

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
பொது : அம்மன் வழிபாடு.

மேஷம்:

திட்டமிட்டு செயல்படுவது அவசியம். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழிலில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.

ரிஷபம்:

பரந்த மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். நல்லவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் திருப்தியளிக்கும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும்.

மிதுனம்:

உறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாமதமான பணியை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தி்ல லாபம் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

கடகம்:

நற்செயலுக்கான பாராட்டு வந்து சேரும். மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய யுக்தி பயன்படுத்துவீர்கள். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

சிம்மம்:

பணி நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் உள்ள குறைகளை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும். அரசு தொடர்பான அனுகூலம் தாமதமாகலாம். இஷ்ட தெய்வ வழிபாடு அமைதிக்கு வழிவகுக்கும்.

கன்னி:

பிறர் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் கூடுதல் பணவரவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்:

குடும்ப பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் கடின உழைப்பு தேவைப்படும். சீரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். பெற்றோரின் அன்பும், ஆசியும் நம்பிக்கை தரும்.

விருச்சிகம்:

நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்

கும்பம்:

அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

மீனம்:

நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம்.பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 08-06-2018