சென்னையில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளைகள்

0
427
Incidents intimidation knife Chennai increasing public fear

Incidents intimidation knife Chennai increasing public fear

சென்னையில் பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னையில் வழிப்பறி சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதிவேக இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்கள் சாலையில் நடந்து செல்வோரிடம் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்செல்வதும், கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் நான்கு வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சென்னை மந்தைவெளிப்பாக்கத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி கனகராஜ் ராதாகிருஷ்ணன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கனகராஜின் வாகனத்தை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பதினேழாயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.

தாம்பரத்தை சேர்ந்த மணிகண்டபிரபு என்பரிடமும், அவரது நன்பரிடமும் தேனாம்பேட்டை மூப்பனார் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி 5ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். தப்பியோட முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது ஆயிரம் விளக்குப்பகுதியை சேர்ந்த அப்பாஸ் மற்றும் விக்கி என்பது தெரியவந்தது.

இதே போல் அமைந்தகரையில் அரசுப் பேருந்து நடத்துநர் கார்த்திகேயன் என்பவரை கத்தியால் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த நகையை பறிக்க சில கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். அவர் கூச்சலிட்டதை தொடர்ந்து கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். படுகாயமடைந்த கார்த்திகேயன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வேப்பேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த சாகிர் முகமது என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி லேப்டாப், செல்போன் மற்றும் நகையை பறித்துச்சென்றுள்ளனர் கொள்ளையர்கள். சென்னையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Incidents intimidation knife Chennai increasing public fear

More Tamil News

Tamil News Group websites :