Categories: FranceWORLD

பிரான்ஸில் இனி இரவில் ரயில் சேவை இல்லை!

பிரெஞ்சு ரயில் தொழிலாளர்கள் இன்று (ஜூன் 7) மற்றொரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். French SNCF rail strikes continue june7

பிரான்ஸ் நாடு முழுவதும் மக்ரோனின் புதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இன்றும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெறுவதனால் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும்.

இன்று பத்தில் ஏழு TGV ரயில்கள் சேவையில் ஈடுபடும். மேலும் TGV Nord இல் ஐந்து ரயில்களில் நான்கு ரயில்கள் இயக்கப்படும்.

சர்வதேச பயணங்களில், Eurostar மற்றும் Thalys ரயில்கள் வழமைபோல இயங்கும். இருப்பினும் பிரான்ஸ்-ஸ்பெயின் பாதைகளில் எந்த ரயில்களும் சேவையில் ஈடுபடாது.

இன்று Intercités ரயில்களின் சேவையிலும் இடையூறு ஏற்படும் என கூறப்படுகிறது. அதாவது, பாரிஸ்-கிரான்வில்லில் ஐந்து ரயில்களில் இரண்டு மட்டுமே புழக்கத்தில் இருக்கும். ஆனால் இரவில் எந்தவித ரயில் சேவைகளும் சேவையில் ஈடுபடாது.

இதற்கிடையில், TER பயணிகள் தங்களது பிராந்திய நிலையத்தில் TER சேவைகளை பற்றி அறிந்து கொள்ளுமாறு கேட்கப்படுகிறது.

RER A சேவைகள் வழமைபோல இயங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் RER B இல் இரண்டில் ஒரு ரயில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளொன்றில் இவ் வேலைநிறுத்தங்களால் பிரான்ஸில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான தினசரி ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**

Tamil

Share
Published by
Tamil
Tags: French SNCF rail strikes continue june7

Recent Posts

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜி முதலில் சந்தித்தது இவரைதானாம்…!

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேறிய நடிகர் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். Bigg boss 2 Balaji met MK Stalin பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜியை,…

3 hours ago

திருடன் என நினைத்து 15 வயது சிறுவனை அடித்தே கொன்ற ஊர் மக்கள்!

கரூர் மாவட்டம்,தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லாலிகவுண்டனூர் பகுதியில் வசித்து வருபவர் இளஞ்சியம்.people killed 15-year-old boy killing thief india tamil…

5 hours ago

படுக்கைக்கு இணங்காததால் மனைவி மற்றும் குழந்தைகள் மீது தீ வைத்த கொடூரன்!

ஆத்தூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.burning fire wife children refuced obey bed india tamil…

8 hours ago

பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு கோத்தா முக்கியமானவரல்ல! பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Sarath Fonseka Latest…

8 hours ago

மின்பாவனையாளர்களுக்கு இலவச மின்குமிழ்! மின்சாரசபையின் அறிவிப்பு!

மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தும் மின்பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டீ. மின் குமிழ்களை இலவசமாக வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. Sri Lanka…

9 hours ago

கருணாஸை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

அக்டோபர் 5-ம் தேதி வரை கருணாஸை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார்.judge orders karunas jail imprisoned india tamil…

9 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.