Categories: Hot NewsNEWS

சம்பந்தனுக்கு நன்றி, பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வியே இது : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

பிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி தனக்கான தோல்வி அல்ல என்றும் அது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.(Sudarshani Fernandopulle)

பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஆனந்த குமாரசிறி தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சபையில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே இதனைக் கூறினார்.

முதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவிக்கு முதற்தடவையாக பெண் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே என்ற நபருக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல.

பெண் ஒருவருக்கு ஏற்பட்ட தோல்வியாகும். இருந்தபோதும், பாராளுமன்றத்தின் உயர் பதவி ஒருவருக்கு பெண் ஒருவர் போட்டியிடும் நிலைக்கு முன்னேறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

தனது பெயரை முன்மொழிந்த எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஆதரவு வழங்கி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல் வரலாற்றில் செனட் சபையாக இருந்தபோது முதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவர் இருந்துள்ளார். பெண் ஒருவர் அடுத்த சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றார்.

தமது ஆட்சியிலேயே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:Sudarshani Fernandopulle,Sudarshani Fernandopulle,Sudarshani Fernandopulle,

Santhosh M

Share
Published by
Santhosh M
Tags: sudarshani fernandopulle

Recent Posts

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கலேவெல…

5 mins ago

ஒரு கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்த முகமூடி நாயகி

பூஜா ஹெக்டே தமிழில் முக மூடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பெரிதாக எந்த வித வாய்ப்புக்கள் இல்லாமல் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கம் பிசியாகி…

9 mins ago

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள்!

{ Doctors perform surgery candle light } ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.…

29 mins ago

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான CID விமர்சனத்துக்கு அவகாசம்!

பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்கழுவில் பொய் சாட்சியம் வழங்கியமைக்கு எதிராக, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்க, கொழும்பு நீதவான்…

31 mins ago

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தை மறைமுகமாக தாக்கிய மஹேல

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். mahella…

41 mins ago

சீதக்காதி: விஜய் சேதுபதி 25…..!

விஜய் சேதுபதி நடிக்கும் 25வது படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணீதரன் உருவாகியிருக்கிறார். இப்படம் இயக்குனர் பாலாஜியின் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. Vijay Sethupathy 25…

57 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.