பிரா இல்லாமல் பாடசாலை வந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

0
732
Braless Protest Motreal

மாணவிகள் பிரா அணிவது கட்டாயமா என்பது தொடர்பில் மாகாணத்திலுள்ள பாடசாலைகளே கலந்துரையாட வேண்டுமென, பெண்கள் விவகாரங்களுக்கு பொறுப்பான கியூபெக் அமைச்சரவை அமைச்சர் ஹெலேன் டேவிட் தெரிவித்துள்ளார்.Braless Protest Motreal

மொன்றியலில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகள் முன்னெடுத்த ‘பிரா லெஸ்’ ஆர்ப்பாட்டத்தை அடுத்து எழுந்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மாணவியொருவர் பிரா அணியாமல் வந்தமையை தொடர்ந்து , அவர் அதனை மறைத்துக்கொண்டு நடக்கும் படி பாடசாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் உடனடியாக வீட்டுக்குச் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து சக மாணவிகளும் பிரா அணிய மறுப்புத் தெரிவித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

இந் நிலையில் குறித்த பாடசாலை தனது கொள்கையை மாற்றிகொள்ள வேண்டுமெனக் கூறி 1000 பேர் மனுவொன்றில் கையெழுத்திட்டனர்.

மேலும் தெரிவிக்கையில்;

“இந்த விவகாரம் தொடர்பிலேயே அமைச்சர் குறித்த அமைச்சர் அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் தம்மை நிர்வகித்துக்கொள்ள முடியும் மேலும் இது சுதந்திரம் தொடர்பான விடயம், ஆலோசனைகளுக்கு பின்னர் , பாடசாலைகள் இதை கட்டாயமாக்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியும், எனினும் பொதுச் சட்டங்கள் எதுவும் கியூபெக் பாடசாலைகளுக்கு செல்லுபடியாகாது,” எனக்குறிப்பிட்டுள்ளார்.