பிரான்ஸில், தொடரும் மோசமான காலநிலை!

0
744
Storms continue France- forecasters warn

இந்த வார கனமழை மற்றும் புயல்களின் பின், சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  Storms continue France- forecasters warn

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இடிமின்னல்களைத் தொடர்ந்து, இந்த வாரமும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் மழையும் பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இந்த காலநிலை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை நாட்டின் செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. வட மேற்கு மற்றும் வட கிழக்கு பிராந்தியங்களில் நேற்று அடைமழை பொழிந்துள்ளது. இதனால் Côtes-d’Armor, Ille-et-Vilaine, Mayenne, Morbihan, Orne மற்றும் Sarthe போன்ற பகுதிகளில் நேற்று காலை 10 மணியிலிருந்து செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

மேலும், இங்கு 60mm வரை மழைவீழ்ச்சி தொடரும் எனவும் இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மற்றும் திடீரென மழைவீழ்ச்சி ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளன. 80kph வரை வளிமண்டலத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

மேலும் வார இறுதிப் புயல்களால் மோர்லக்ஸ் நகரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**