Type to search

இணையத்தில் சக்கைப்போடு போடும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர்..!

CINEMA Kollywood Teaser & Trailer

இணையத்தில் சக்கைப்போடு போடும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் “துருவ நட்சத்திரம்” படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந் நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கௌதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.(Dhruva Natchathiram Teaser viral Social Media)

கௌதம் மேனனின் கனவுப் படமான “துருவ நட்சத்திரம்” படத்தில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

மேலும், கடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. இந் நிலையில், இன்று படத்தின் டீசரின் சில காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

அதனைத் தொடர்ந்து படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசருக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.. :-

“ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Video Source : Sony Music India

<MOST RELATED CINEMA NEWS>>

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

ப்ளீடிங் ஸ்டீல் : திரை விமர்சனம்..!

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட அனுமதி கோரி தனுஷ் மனுத்தாக்கல்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Dhruva Natchathiram Teaser viral Social Media

Our Other Sites News :-

அடம்பிடிக்கிறார் கிம்! : இரவுக்கு 6,000 டொலர்கள்!


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: