பிரிட்டிஷ் பிரதமருடன் பேச்சுவார்த்தை!

0
715
British Prime Minister Teresa May talks trump related steel issue

பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே, ஸ்டீல் மற்றும் அலுமினிய கட்டணத்தை பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார். British Prime Minister Teresa May talks trump related steel issue

இரு தலைவர்களும் மீண்டும் இந்த வாரம் இப்பிரச்சினையை பற்றி விவாதிக்க இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயின் செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும் அவர், இவ் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதியுடனும் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

டிரம்ப் நிர்வாகத்தின் அலுமினியத்தில் 10%, மற்றும் எஃகு பொருட்கள் மீதான 25% சுங்க வரிகளை சுமத்தும் நடவடிக்கை மீது கடும் எதிர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கனடா, மெக்ஸிகோ போன்ற சில நாடுகளும் பரவலாக கண்டனம் வெளியிட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் இந்த வரிவிதிப்புக்கு “உறுதியான மற்றும் சரிவிகித அளவிலான” நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்படும் என்று டிரம்பிடம் தொலைபேசி மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**