அடாத்தாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களை வௌியேற்ற மந்திராலோசனை

0
442
meeting examine expulsion Sinhala fishermen stayed Maruthankerni

(meeting examine expulsion Sinhala fishermen stayed Maruthankerni)

மருதங்கேணி பகுதியில் அடாத்தாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று இன்று (02) காலை 7.30 மணிக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிகளை அமைத்துக் கொண்டு 1500 ற்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் தங்கியிருக்கின்றனர். மேற்படி மீனவர்களை வெளியேற்றுமாறு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கோரிவருகின்றனர்.

அது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டமே இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் தொடர்பாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் சிலர் தகவல் தருகையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

இல்லையேல் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என எச்சரித்துள்ளனர்.

(meeting examine expulsion Sinhala fishermen stayed Maruthankerni)

More Tamil News

Tamil News Group websites :