Categories: GOSSIPHead LinePolitical Gossip

ராமாயணத்தில் சீதா “டெஸ்ட் டியூப் பேபி “சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட உபி துணை தலைவர்

(Lord Sita Test tube Baby U P Deputy CM Controversy )

ராமாயணத்தில் வரும் சீதா தேவி, பூமியில் பிறந்தவர் என்று கூறப்பட்டாலும், இன்றைய தொழில்நுட்பத்தில் அவர் ‘டெஸ்ட் டியூப் குழந்தை’ போன்றவர் என்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

இதுத்தொடர்பாக மதுரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர்.,

‘இதழியல்துறை (பத்திரிக்கைதுறை) என்பது நவீன காலத்தில் தொடங்கியது அல்ல. மஹாபாராதம் நடந்த காலத்திலேயே இதழியல் இருந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இன்று அனைத்து விஷயங்களுக்கும் கூகுள் தளத்தைத்தான் நாம் தேடுகிறோம். ஆனால், புராணகாலத்திலேயே நடமாடும் கூகுள் இருந்தது. அது வேறுயாருமல்ல நாரத முனிவர்தான் நடமாடும் கூகுள் ஆவார்.

இவர் எந்த இடத்துக்கும் எளிதாகச் சென்று, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தகவலை வேகமாக பரப்பிவந்தார். ஏராளமான தகவல்களையும் கையில் வைத்திருந்தார். இவர்தான் முன்பு இருந்த கூகுள்.

ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், ராமனின் மனைவி சீதா தேவி பூமியில் இருந்து தோன்றியவர் என்கின்றனர். ஜனகர் நிலத்தில் கலப்பையில் உழும்போது சீதா தேவி குழந்தையாகக் கிடைத்தார்.

என்னைப்பொறுத்தவரை இப்போது இருக்கும் ‘டெஸ்ட் டியூப் பேபி’ போன்றுதான் அந்த காலத்தில் சீதா தேவி பூமியில் இருந்து பிறந்தார்’ என்று பேசினார்.

உ.பி.துணை முதல்வர் தினேஷ் சர்மாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News source : tamil.eenaduindia.com

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Lord Sita Test tube Baby U P Deputy CM Controversy
Tamil Selvi L

Share
Published by
Tamil Selvi L
Tags: latestLord Sita Test tube Baby U P Deputy CM ControversyPolitical speechtaml gossipU P Deputy CM Controversy speechworld gossip

Recent Posts

மூன்றாவது நாளாகவும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும் (20) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Sri Lanka Dollar Value Increases Today…

1 min ago

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (case emission waste river Cauvery) எனவே…

5 mins ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

16 mins ago

பொலிஸ் மா அதிபர் அப்படியானவர் அல்ல! இராஜாங்க அமைச்சர் ருவன்!

பொலிஸ் துறையின் முன்னேற்றத்துக்காக பாரியளவில் பணியாற்றிய ஒருவராகவே பொலிஸ் மா அதிபரை தான் நோக்குவதாகவும், அவர் ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்திருக்க மாட்டார் என்றே தான்…

19 mins ago

மைத்திரியை கொலை செய்ய ரணில் சதி! சர்ச்சையை கிளம்பியுள்ள 15 பேர் குழு!

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியிலிருந்து தப்பித்து கொள்ள ரணில், மைத்திரியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களின்…

41 mins ago

சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா???

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கடைசி சீஸனின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ராஜலெட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செந்தில் டைட்டில் வென்றதோடு அழகான வீட்டையும் பரிசாக பெற்றார். Super…

10 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.