நடிகர் ரஜினிகாந்தை யார் நீங்கள் என்று கேட்ட இளைஞர் விளக்கம்

0
604
young man Rajinikanth Tuticorin district TamilNadu explained video subject

young man  Rajinikanth Tuticorin district TamilNadu explained  video  subject

நடிகர் ரஜினிகாந்தை யார் நீங்கள் என்று கேட்ட இளைஞர் அது குறித்து வீடியோ காட்சி மூலம் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பிறகு அனைத்து அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்த்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன் தூத்துக்குடி சென்றார்.

“நடிகனாக என்னை பார்த்து மக்கள் மனமகிழ்வார்கள்” என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மகிழ்ச்சியுடன் சென்ற ரஜினிக்கு சந்தோஷ் என்கிற கல்லூரி மாணவர் கேட்ட கேள்வி மொத்த நிகழ்ச்சியையும் திருப்பி போட்டது.

அவர் கேட்ட கேள்வி நீங்கள் யார்? நான் ரஜினிகாந்த். அது தெரியுது 100 நாட்களாக எங்கே சென்றீர்கள் என்று கேட்டார். ரஜினி சிரித்தபடி சென்றார். இந்த நிகழ்வு ஊடகங்களில் வெளிவந்த வீடியோ இந்தியா முழுதும் பிரபலமானது.

அதே கோபத்தில் வந்த ரஜினி அன்று மாலை பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்டார். இதனால் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்தை கேள்வி கேட்ட இளைஞர் மாணவர் அமைப்பை சேர்ந்தவர் என்று கிளப்பியவர்கள் அவரை தீவிரவாதிகள்என்ற அளவுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

ரஜினியை கேள்விகேட்ட ஒரே காரணத்தால் சாதாரண மாணவரான தன்னை சமூக விரோதிகள் அளவுக்கு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதையடுத்து, மாணவர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் ஏன் ரஜினியை கேள்வி கேட்டேன் தனது நோக்கம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவரது விளக்கம்:

“என்னைப்பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். நான் சொன்ன நோக்கம் வேறு. மீடியாக்காரர்கள், ட்ரோல் செய்பவர்கள் வேறு திசையில் கொண்டுச் செல்கிறார்கள். நான் சொன்னது அந்த நோக்கத்துடன் அல்ல, எல்லோருக்கும் தெரிந்த விடயம் மற்ற அரசியல் தலைவர்கள் பதவியில் இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பு, ஆனால் ரஜினிகாந்த் அப்படி அல்ல.

ரஜினி என்று சொன்னாலே அது வேறு. அவருக்கு பதவி எதுவும் தேவையே கிடையாது. ரஜினின்னு சொன்னாலே பெரிய மதிப்புதான். அவர் எங்களுக்கு சப்போர்ட் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், 100 நாள் வரவில்லையே, சப்போர்ட் செய்திருந்தால் எங்களுக்கு பெரிய படைபலமா இருந்திருக்குமே என்று கேட்டேன்.

அந்த காரணத்தினால் ஏற்பட்ட வருத்தத்தில் தான் மக்களுக்காக பணி செய்ய வரவேண்டும் என்ற எங்களுக்குள்ள உரிமையால் தான் கேட்டேன். ஆனால் அதை ஊடகங்ககள் அவர்களுடைய நேரபோக்குக்கும், விளம்பரத்துக்கும் அதை வித்தியாசப்படுத்தவதற்காக வேறு மாதிரி கொண்டுச்செல்கிறார்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் பாதிக்கிறது” இவ்வாறு சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

young man  Rajinikanth Tuticorin district TamilNadu explained  video  subject

More Tamil News

Tamil News Group websites :