துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதிலளிக்குமாறு இந்திய மேல்நீதிமன்றம் உத்தரவு

0
422
Human Rights Commission Office connection shooting Thoothukudi

Shooting Supreme Court  India ordered Tamil Nadu government  respond

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு இந்திய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22ஆம் திகதி நடைபெற்ற பேரணி போராட்டத்தின் போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அகில இந்திய சட்டத்தரணி சங்க பொதுச்செயலர் என்.முத்து அமுதநாதன், “முறையான அனுமதி பெறாமல் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதால் தமிழக தலைமைச் செயலர், உள்துறைச செயலர், காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர், சிப்காட் பொலிஸ் ஆய்வாளர் ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்யவும், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கடந்த 30ஆம் திகதி மேல்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தகுமார், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த 2 வழக்குகளும் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், எதற்காக தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதற்கு தமிழக அரசு எதிர்வரும் 6-ஆம் திகதி விளக்கமளிக்க வேண்டும் என்று மேல்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

Shooting Supreme Court  India ordered Tamil Nadu government  respond

More Tamil News

Tamil News Group websites :