வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – வைகோ

0
534
protest-againstt-velmurugan-arrested-case-treason-case

 protest againstt Velmurugan arrested case treason case

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, போராட்டம் நடத்தியதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்வரும் 5ஆம் திகதி சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது கடந்த 22ஆம் திகதி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற வேல்முருகனை கைது செய்த பொலிஸார், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கிய வழக்கில் புழல் சிறையில் அடைத்தனர்.

அங்கு 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால், வேல்முருகனின் உடல்நிலை பாதிப்படைந்தது.

இந்நிலையில், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுடிருந்த அவரை மீண்டும் கடலூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். என்.எல்.சி முன் போராட்டம் நடத்திய வழக்கில், அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களைக் காணச் சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும் தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்திற்குப் பின்னர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் பொலிஸார் அடைத்தனர்.

மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும் தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவரைச் சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகிவிடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன்.

அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 30ஆம் திகதி மாலையில் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் தமிழக அரசின் காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டுள்ளது.

மீண்டும் நேற்று 31 ஆம் தேதி மனிதாபிமானமின்றி மீண்டும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர்.

தமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்குமுறையையும் கண்டித்து எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நாடு முழுவதும் பா.ஜ.க. அடிமேல் அடி வாங்கி வருகிறது.

எதிர்வரும 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக்கட்சியால் நிச்சயம் 150 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

protest againstt Velmurugan arrested case treason case

More Tamil News

Tamil News Group websites :