மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி!

0
792
Nurse used cellphone treatment, malaysia tami news, malaysia, malaysia news, Nurse,

{ Nurse used cellphone treatment }

மலேசியா: சுல்தானா அமீனா மருத்துவமனையில் பயிற்சிபெற்ற தாதி ஒருவர், சுவாசக் கோளாறுள்ள ஒரு நோயாளியின் மூச்சுத் திணறலுக்குச் சிகிச்சை அளிக்கும் போது கைத்தொலைபேசி பயன்படுத்திக் கொண்டிருந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து, அந்த பயிற்சிபெற்ற தாதிக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என ஜொகூர் சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் சலாவுடீன் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சம்பந்தப்பட்ட நோயாளி தற்போது சுல்தானா அமீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான முழு விவரத்தை பெற நோயாளியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“சுல்தானா அமீனா மருத்துவமனை மற்றும் தேசிய சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்களும் தாதியரின் மேற்பார்வையாளர்களும் அடங்கிய ஒரு குழு இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளது,” என அவர் நேற்று தேசிய சுகாதாரத் துறையின் முகநூலில் பதிவிட்டிருந்துள்ளார்.

விசாரணையில் அலட்சியமாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தாதியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Tags: Nurse used cellphone treatment

<< RELATED MALAYSIA NEWS>>

*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!

*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!

*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!

*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!

*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!

*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

<< RELATED MALAYSIA NEWS>>