கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை பார்வையிட தடை!

0
701
France ban world cup big screens zone

கால்பந்தாட்ட உலக கிண்ணப்போட்டிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக திறந்த பொது இடங்களில் நிகழ்வுகள் நடத்த முடியாது என, உள்துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார். ஆனால் இப்போட்டிகள் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் மட்டும் ஒளிபரப்பப்படலாம் என தெரிவித்துள்ளார். France ban world cup big screens zone

அவர், பாதுகாப்பு காரணமாக திறந்த பொது இடங்களில், பெரிய திரைகளில் உலகக் கோப்பை போட்டிகளைக் காண்பிக்க கூடாதென நகர பொறுப்பதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “தற்போதைய பயங்கரவாத அச்சுறுத்தலின் பின்னணியில், ஐரோப்பிய கால்பந்து வெற்றிக்கிண்ணத்தில் பயன்படுத்தப்படும் நடைமுறைகள் இம்முறை பயன்படுத்தப்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒழுங்குகள் பிரான்ஸில் நடைபெற்ற யூரோ 2016 இனை ஓத்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

ரஷ்ய உலகக் கோப்பைக்கு, உள்துறை அமைச்சகம் இத்தகைய நிகழ்வுகள் அரங்கங்கள், விளையாட்டு அரங்குகள், அல்லது கச்சேரி அரங்குகள் மற்றும் கண்காட்சி மையங்கள் போன்ற வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டும் நடத்தலாம் என்று கூறியது. ஆனால், அங்கு பிரச்சினைகள் ஏற்பட்டதுடன், அமைப்பாளர்களின் ஒழுங்கப்படுத்தலால் பாதுகாப்பு வழங்கப்பட்டதன் மூலம் அப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தியுள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**