Categories: INDIATop Story

பட்டியலினத்தவர் மீது சாதி ஆதிக்கச்சக்தியினர் கொடூரத் தாக்குதல் – கச்சநத்தம் கிராமம்!

casteist attack list caste victims – Kachanatham village

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 50 தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களும் சாதிஆதிக்கச் சமூகத்தின் 5 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில் சாதி ஆதிக்கச் சமூகத்தின் சுமன் என்பவரின் குடும்பம் மட்டும் கஞ்சாவியாபாரம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து அங்கு வாழும்பட்டியலின மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுப்பதும் , காவல்துறை இதில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் நிலையும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் திங்களன்று கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா முடிந்த நிலையில் சாதி ஆதிக்கச் சக்தியினர் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பட்டியலினமக்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அறிவழகன் மகன் சண்முகநாதன் (39), கோனான் மகன் ஆறுமுகம் (65) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுகுமாறன், தனசேகர், மலைச்சாமி உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம்அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடலை வாங்காமல் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே மூன்று நாள்களாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், சி.பி.எம் கட்சி சார்பாக கனகராஜ், சிவகங்கை மாவட்ட சி.பி.எம் செயலாளர் கந்தசாமி, மள்ளர் கழகம் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல் ராஜ், மூவேந்தர் புலிப்படை பாஸ்கரன் போன்றவர்கள் ஒருங்கிணைப்பு குழுவாக இருந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  இப்படுகொலை சம்பவத்தைக் கண்டித்து வி.சி.க, புதிய தமிழகம், தமிழ்புலிகள் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து இப்போராட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இரவு போராட்டத்தில் கலந்து கொண்டார். இன்று மருத்துவமனையில் காயம்பட்டவர்களை சந்திக்கிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ஒரு சாதியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்திருக்கிறார்கள். நேர்மையான ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடனடியாக நியமித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: casteist attack list caste victims - Kachanatham village

Recent Posts

யாஷிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சந்திரமுகியாக மாறிய ஐஸ்வர்யா!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேறியதாக தெரிய வந்துள்ளது. Yashika balaji evicted fromm biggboss 2 இந்த வாரம் மட்டும் இரண்டு…

47 mins ago

ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas…

12 hours ago

அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!

நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது.ttv-dinakaran team ramasamy controversy india…

15 hours ago

பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய் என கூறியுள்ளார்.stalin give doctor degree lying edappadi palanisami india tamil news கன்னியாகுமரி மாவட்டம்…

15 hours ago

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.aiadmk minister supporter protest police india tamil…

16 hours ago

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டுவில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் பேராசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்…

16 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.