கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

0
462
Trincomale Uppuvali Police arrested two persons Keralas Kanjunai Drug

(Trincomale Uppuvali Police arrested two persons Keralas Kanjunai Drug)

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துவரங்காடு, கிளிகுஞ்சிமலை பிரதேச நகரங்களில் நேற்று கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்ததாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

5 கிராம் கேரளா கஞ்சாவுடன் 23 வயதுடைய உட்துறைமுக வீதியை பிறப்பிடமாகவும் துவரங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஒருவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், 330 போதை மாத்திரைகளுடன் 26 வயதுடைய நீதிமன்ற வீதியை பிறப்பிடமாகவும் கன்னியா கிளிகுஞ்சுமலையை வசிப்பிடமாக கொண்ட இருவரையும் கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் போதை பொருட்களையும் உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

(Trincomale Uppuvali Police arrested two persons Keralas Kanjunai Drug)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை