Categories: INDIATop Story

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!

tell truth said true event chennai tamilnadu

‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ண்ன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சாதாரண குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து தீர்வு வழங்கப்படும். இவ்வாறு நிகழ்ச்சி நடைபெறும் போது அவ்வப்போது இருதரப்பினருக்கிடையே சண்டை வருவதும் வழக்கம். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு இருப்பது போல் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பும் இருந்து வந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில், இந்நிகழ்ச்சி ஏழை மக்களின் அடிப்படை மற்றும் தனி மனித உரிமைகளை பாதிக்கிறது என்றும் , அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் விவாதிக்கும்போது மற்றொரு தரப்பினரின் உரிமை பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த முரளிதரன், கிருஷ்ணசாமி ஆகிய இரு நீதிபதிகள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு  ஜூன் 18 – ம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும்  `ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: tell truth said true event chennai tamilnadu

Recent Posts

திகன விமான நிலையத்தின் நிர்மாணிப்பணிகள் தொடர்பில் புதிய குழு நியமனம்!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 137 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட திகன உள்ளூர் விமான நிலையத்தின் நிர்மாணிப்பணிகள் சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புக்களின் எதிர்ப்புக்கள்…

8 mins ago

வயிற்றுப்பகுதியை முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்கு முன் துபாய் வாலிபர் செய்த செயல்

துபாயை சேர்ந்த வாலிபர் குலாம் அப்பாஸ் வயிற்றில் புற்று நோய் இருந்தது. இதற்காக அவர் துபாயில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் புற்றுநோயின் தாக்கம்…

27 mins ago

7 பேர் விடுதலை; தமிழக ஆளுநரை அற்புதம்மாள் சந்திப்பு

தமிழக ஆளுநரை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்றைய தினம் நேரில் சென்று சந்தித்துள்ளார். (perarivalan mother arputhammal meet tamilnadu governor) அப்போது 7 பேரை விடுவிக்கும்…

33 mins ago

ஞானசார தேரர் மீண்டும் வைத்தியசாலைக்கு மாற்றம்!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையினை தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு…

1 hour ago

சென்னையில் மின்சார புகையிரதம் மோதி இரண்டு பேர் பலி

சென்னையில் தண்டவாளத்தைக் கடந்த போது மின்சார புகையிரதம் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (Two killed electric train crossing tracks) சென்னையில்…

2 hours ago

ஷில்பா ஷெட்டி மீது இன வெறி தாக்குதல்

ஷில்பா ஷெட்டி நேற்று முன் தினம் ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் செல்லும்போது லக்கேஜ்களுடன் விமான நிலையத்தில் செக் இன் செய்ய சென்றபோது, அளவுக்கு அதிகமான…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.