G20 கலவர வழக்கின் விசாரணைப் பிடியில் சுவிஸ் நபர்

0
480

(Swiss man questioned G20 riot case)

கடந்த செவ்வாயன்று நான்கு நாடுகளில் நடந்த பொலிஸ் பரிசோதனையின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஜேர்மனியில் உள்ள ஹம்பர்கில் நடைபெற்ற G20 கலவரத்துடன் தொடர்புடைய சுவிஸ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

27 வயதான இந்நபர் முதலில் விடுவிகப்பட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது. உள்ளூர் போலீசும், வக்கீலும் அவரை வ்சாரித்தனர். மேலும் Aargau உள்ள Bremgarten இல் அவரது அபார்ட்மெண்ட் மற்றும் ஒரு மாற்று கலாச்சார மையத்தை சோதித்தனர்.

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் செவ்வாய்க்கிழமை காலை திடீர்ச்சோதனை நடந்தது.

ஜூலை 7 ம் திகதி, கார்களை தீக்கிரையாக்கி, கடைகளை சூறையாடி, ஜேர்மனிய போலீஸைத் தாக்கிய கலகக்காரர்கள் 225 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுவிஸ் நியூஸ் ஏஜென்சியினால் கேட்டபோது, செவ்வாய்க்கிழமை Bremgarten இல் நடந்த விசேடசோதனை பற்றி Hamburg பொலிசார் குறிப்பிட்ட விவரங்களை வழங்க மறுத்துவிட்டனர். ஆயினும், ஹாம்பேர்க் பொலிஸ் தலைவர் Ralf Meyer, “G20 உச்சிமாநாட்டின் போது கடுமையான குற்றங்களை செய்தவர்களை அடையாளம் காண்பதற்கான முக்கியமான நடவடிக்கை இது” என்று விவரித்தார்.

Swiss man questioned G20 riot case, Swiss man questioned G20 riot, Swiss man questioned G20, Swiss man questioned, questioned G20 riot case, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites