Categories: MalaysiaWORLD

நாடு திரும்பினால் என்னை கொன்று விடுவார்கள்! சிருல்

{ surul malaysia kill althandhuya }

மலேசியா; தனக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் மலேசியாவிற்கு திரும்பி வந்து அல்தான்துயா ஷாரிபு கொலை சம்பவம் தொடர்பில் தகவல் வழங்குவதாக கூறியிருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி சிருல் ஆசார் தற்போது தனது முடிவை மாற்றிக்கொள்வார் என நம்பப்படுகின்றது.

டெ கார்டியனுக்கு அளித்த நேர்க்காணலில் ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர் அந்நாட்டிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் எனக்கு ஆயுள் சிறைதண்டனை விதிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார். நான் திரும்பி போக விரும்பவில்லை. சிலர் எனக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது என கூறுகின்றனர். என்னை சிறையில் வைத்து கொன்று விடுவார்கள் என அவர் கூறியுள்ளார். முன்னராக, தனது தண்டனை குறைக்கப்பட்டால் நாட்டிற்கு திரும்புவீர்களா? என வினவப்பட்ட போது சிருல் இவ்வாறு கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அல்தான்துயா கொலை வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு சிருல், ஆசிலா ஹட்ரி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் அந்நேரத்தில் அப்போதைய துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்.

ஆசிலா தனது தண்டனைக்காக சிறையில் காத்திருக்கும் நிலையில் சிருல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கு தப்பி சென்றார். ஆஸ்திரேலியா அரசாங்கம் மரண தண்டனைக்கு அங்கீகாரம் வழங்காத நாடாக இருப்பதால் சட்டச்சிக்கல் காரணமாக சிருலை நாடு கடத்த முடியவில்லை என முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கம் கூறியிருந்தது.

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அல்தான்துயா கொலை சம்பவம் பற்றிய விசாரணை மீண்டும் தொடங்கப்பட வேண்டுமென கோரிக்கைகள் வழுத்துள்ளது.

Tags: surul malaysia kill althandhuya

<< RELATED MALAYSIA NEWS>>

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!

*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!

*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!

*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!

*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

<< RELATED MALAYSIA NEWS>>

 

Kowshalya V

Share
Published by
Kowshalya V
Tags: althandhuyamalaysiamalaysia newsmalaysia tamil newssurul malaysia kill althandhuya

Recent Posts

லிட்ரோ கேஸ் பண மோசடி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை!

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 நபர்களுக்கும் எதிரான வழக்கை தொடர்ந்தும் விசாரணை செய்ய விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. Litro Gas Money…

6 mins ago

பெரியார் சிலை மீது காலணி வீசியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.thunderbolt law fired shoe statue periyar கைது…

40 mins ago

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 28 வயது பாடகியும் அவரின் 65 வயது காதலரும் : வைல்ட் கார் என்ட்ரியா ??

தமிழில் பிக் பாஸ் தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஹிந்தியில் நேற்றைய முன்தினம் 12வது சீசன் தொடங்கியது. இந்நிலையில் ஜோடி ஜோடியாக மட்டுமே இந்த பிக் பாசில்…

57 mins ago

கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன நாடு திரும்பினார்!

பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரவீந்திர விஜேகுணரத்ன நாடு திரும்பியுள்ளார். Sri Lanka Navy Commander Ravindra vijay gunawardana Tamil Latest News கொலம்பியாவில்…

60 mins ago

லிப்டில் மகத் செய்த கசமுசா : வைரலாகும் புகைப்படத்தால் கலக்கத்தில் மகத்

மகத் பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி தற்போது வைரலாகியுள்ளது.(Mahath Lip lock Kiss leaked Photo Viral) அதாவது சிம்புவின் நண்பரான…

2 hours ago

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

3 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.