Categories: Head LineMalaysiaWORLD

நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

{ situation country worse Mahatir }

மலேசியா: நாட்டின் நிர்வாக முறைக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் நாட்டின் நிர்வாகச் செலவினம் குறைக்கப்படும் என்றும் தேவையற்ற மற்றும் வீண் செலவுகளும் குறைக்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த அரசாங்கள் விட்டுச் சென்ற அதிகமான பிரச்னைகளை நாங்கள் சந்தித்திருக்கின்றோம் என்று இன்று புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில் நடைபெற்ற 2ஆவது அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனை கூறியுள்ளார்.

நாட்டின் நிர்வாக செலவினத்தை குறைப்பதற்கு நிதி முறை நல்ல முறையில் நிர்வாகிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது செலவினங்களை வேண்டுமென்றே குறைக்கப்படும் என்று அர்த்தமல்ல.

அதிகமான வீண் செலவினங்கள் ஏற்படாமல் இருக்கவும் செலவுகள் ஒதுக்கி வைக்கப்படாமலிருக்கவும் இவ்வாறு செலவுகள் குறைக்கப்படுகின்றது. அதே வேளையில், நாட்டின் நிதி நிலைமையையும் வலுப்படுத்த வேண்டும் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிஸா வான் இஸ்மையில், அமைச்சரவை உறுப்பினர்கள், நாட்டின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாகடர் அலி ஹம்சா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பக்கத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிகள் 14ஆவது பொதுத் தேர்தல் தொடங்கி சுமார் 100 நாட்களுக்குள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று அதன் தலைவருமான துன் மகாதீர் கூறியுள்ளார்.

100 நாட்களுக்கு வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் வாக்குறுதியளித்திருந்தோம். ஆனால், நாட்டின் நிலைமை நாங்கள் நினைத்ததைவிட மோசமான நிலையில் உள்ளது.

கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதே வேளையில், நாட்டின் நிதி நிலைமையைச் சீர்படுத்துவதோடு நிர்வாக முறைக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டியை அகற்றுதல், பல்வேறு முயற்சிகளின் வழி வாழ்கை செலவினங்களை குறைத்தல், டோல் கட்டணம் ரத்து, எண்ணெய் விலையை நிலை நிறுத்துதல், பெட்ரோலுக்கான உதவித் தொகை உட்பட 100 நாட்களுக்குள் 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என பக்காத்தான் ஹராப்பான் 14ஆவது பொதுத் தேர்தலின்போது வாக்குறுதிகளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: situation country worse Mahatir

<< RELATED MALAYSIA NEWS>>

*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!

*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!

*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!

*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!

*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

<< RELATED MALAYSIA NEWS>>

Kowshalya V

Share
Published by
Kowshalya V
Tags: malaysiamalaysia newsmalaysia tamil newssituation country worse MahatirThun Mahathir

Recent Posts

தியாகி திலீபன் நினைவேந்தலை யாரும் தடுக்க முடியாது! யாழ். மாந­கர மேயர்!

எமது மக்­க­ளுக்­காக உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதைத் தடுக்­கும் உரிமை எவ­ருக்­கும் கிடை­யாது. நினைவு கூரு­வது என்­பது மக்­க­ளின் அடிப்­படை உரிமை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை…

9 mins ago

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க பொலிஸ் கோரிக்கை

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுதாக்கல் செய்துள்ளனர். (police filed pettition chennai egmore court take karunas custody)…

32 mins ago

சர்கார் பாடல் வெளியானது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..! (வீடியோ)

முருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியானது. இந்நிலையில் சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் அறிவதற்கு பல போட்டி சமூக வலைத்தளத்தில்…

39 mins ago

கூட்டு எதிர்க் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்யும் நோக்கம் இல்லை!

ஜனாதிபதியையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்ய கூட்டு எதிர்க் கட்சியினர் சதி செய்யவில்லையெனவும், அவ்வாறு செய்யக்கூடிய யாரும் கூட்டு எதிர்க் கட்சியில் இல்லையெனவும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற…

41 mins ago

“ஒரு புருஷனோடு வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை இரண்டு புருசனோடு வாழ்பவர்கள் எல்லாம் கேட்டவர்களும் இல்லை ” நடிகை வனிதாவின் கொச்சை வார்த்தைகள்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் பிரச்சனை பெறும் பிரச்சனையாக சென்று கொண்டிருகின்றது .அவர் எல்லா மீடியா  முன்னிலையிலும் தமது குடும்ப பிரச்சனையை பேசி மானத்தை வாங்கி வருகின்றார்…

1 hour ago

வைத்தியர்களுக்கு எதிரான சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை!

இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்குறிய சம்பளத்தை இடைநிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. Doctors Transfer Health Ministry Action Sri…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.