Categories: FranceWORLD

மீண்டும் செரீனா வில்லியம்ஸ்!

செம்மண் தரையில் நடைபெறும் கிராண்ட் ஸ்லாம் டெனிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் பிரான்ஸில் மே 27 ஞாயிறன்று தொடங்கியது. Serena Williams participated open tennis 2018

கடந்த ஓராண்டுக்கு மேலாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது முதல் ஆட்டத்தில் செக் நாட்டின் பிளிஸ்கோவாவை 7-6 (7-4) 6-4 செட்களில் வெற்றி கொண்டு இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபன் போட்டி 2-ஆம் சுற்றுக்கு ரஃபேல் நடால், மரின் சிலிக், ஷபவோலவ் உள்ளிட்டோர் முன்னேறினர். உலகின் முதல்நிலை வீரர் நடாலும், இத்தாலியின் சீமோன் பொலேலியும் முதல் சுற்றில் மோதினர். இதில் 6-4, 6-3, 7-6 (9) என்ற 3 செட்களில் நடால் வெற்றி பெற்றார். 11-வது சாம்பியன் பட்டத்தை எதிர்நோக்கியுள்ள நடால், அடுத்த சுற்றில் ஆர்ஜென்டீனாவின் கியுடோ பெல்லாவே சந்திக்கிறார்.

மூன்றாம் நிலை வீரர் மரின் சிலிக் 6-3, 7-5, 7-6 என்ற செட்களில் ஆஸி.யின் ஜேம்ஸ் டக்வொர்த்தை வென்றார். கனடாவின் ஷபவாலோவ் 7-5, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸி வீரர் ஜான் மில்மேனை வீழ்த்தினார். முன்னாள் சாம்பியன் கார்பைன் முகுருசா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

15 மாத தடைக்கு பின் வரும் மரியா ஷரபோவா தனது முதல் ஆட்டத்தில் டச் நாட்டின் ரிச்சேல் ஹோகேன்கெம்புடன் மோதுகிறார்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் நிக் கிர்ஜியோஸ் முழங்கை காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்விட்சர்லாந்து வீரரான ஸ்டான் வாவ்ரிங்கா, ஸ்பெயின் வீரரான கில்லர்மோ லோபஸிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**

Tamil

Share
Published by
Tamil
Tags: france tamil newsOpen tennis 2018serena williamsSerena Williams participated open tennis 2018

Recent Posts

லிப்டில் மகத் செய்த கசமுசா : வைரலாகும் புகைப்படத்தால் கலக்கத்தில் மகத்

மகத் பியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி தற்போது வைரலாகியுள்ளது.(Mahath Lip lock Kiss leaked Photo Viral) அதாவது சிம்புவின் நண்பரான…

34 mins ago

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

35 mins ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

1 hour ago

“பிக் பாஸ் பைனல் ரேங்க் ” நான் தான் எப்பொழுதும் ஃபர்ஸ்ட் : ஜனனியுடன் சண்டைக்கு நிற்கும் யாஷிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .(Tamil Big Boss Final Rank Episode Promo)…

1 hour ago

அனுராதபுரம் சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக மகசின் சிறைக்கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.…

1 hour ago

இந்திய-பாகிஸ்தான் போட்டியை நேரில் காணவுள்ளார் பாக். பிரதமர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா எதிர் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்த போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் பார்க்க செல்ல…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.