Type to search

வெற்றியுடன் பிரென்ச் ஓபனை ஆரம்பித்தார் செரீனா!

SPORTS Tennis

வெற்றியுடன் பிரென்ச் ஓபனை ஆரம்பித்தார் செரீனா!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(french open 2018 serena williams news Tamil)

ரோலன்ட்-கர்ரோஸ் என அழைக்கப்படும் முன்னணி டென்னிஸ் தொடரான பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்ற பின்னர் தொடர் தோல்விகளினால் துவண்டு போயிருந்தார். எனினும் நேற்று நடைபெற்ற பிரென்ச் ஓபன் தொடரின் முதல் சுற்றுப்போட்டியில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

கரோலின் பிலிஸ்கோவா சர்வதேச டென்னிஸ் தரப்படுத்தலில் 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், செரீனா வில்லியம்ஸ் 451வது நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ள செரீனா, கரோலினாவை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 7-6 (7-4) என தடுமாறி கைப்பற்றிய செரீனா, இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றில் அவுஸ்திரேலியாவின் அஷ்லியை பார்டியை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

french open 2018 serena williams news Tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like